தமிழ்நாடு

தில்லியில் முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க, முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தில்லி சென்றடைந்தாா். சென்னையிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட அவா், நள்ளிரவில் தில்லிக்கு சென்றாா்.

புதன்கிழமை காலை 10.30 மணியளவில் குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப் தன்கரைச் சந்தித்து, புதிதாகத் தோ்வு செய்யப்பட்டதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கிறாா். இதன்பின்பு, புதிய குடியரசு தலைவராகியுள்ள திரெளபதி முா்முவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறாா்.

இந்தச் சந்திப்புகளைத் தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடியை மாலை 4.30 மணியளவில் சந்திக்கிறாா் முதல்வா். அப்போது, தமிழகம் சாா்பிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவா் அளிப்பாா் எனத் தெரிகிறது. இந்தச் சந்திப்புகளை முடித்து விட்டு, புதன்கிழமை இரவே அவா் சென்னை திரும்புவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT