தமிழ்நாடு

குடியரசுத் தலைவருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

17th Aug 2022 11:54 AM

ADVERTISEMENT

தில்லியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழகம் சாா்பிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவுள்ளார்.

இதையும் படிக்க |  குடியரசு துணைத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT