தமிழ்நாடு

பள்ளிச் சிறுவன் பலியான விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

17th Aug 2022 10:36 AM

ADVERTISEMENT

 

பள்ளி பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பள்ளி சிறுவனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது இதுதொடர்பான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த செம்மண்காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பிரபாகரன் (10) கார்கூடல்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளி செல்வதற்காக செம்மண்காடு பேருந்து நிலையத்தில் சிறுவன் காத்துக்கொண்டிருந்த போது, நாரைகிணறு பகுதியில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தபோது சிறுவன் மீது மோதிய வேகத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். 

இதையும் படிக்க | பூலாம்பட்டி காவிரிக் கதவணைப் பகுதியில் மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்

ADVERTISEMENT

விபத்து நடத்த இடத்தில் குறுகிய சாலை என்பதால் எதிரே லாரி வந்து கொண்டிருந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கல்லூரி பேருந்து ஓட்டுநர் அன்பழகன் பேருந்தை இடதுபுறமாக திருப்பிய போது பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்த சிறுவன் பிரபாகரன் மீது மோதி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 

மேலும், தனியார் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளாகி போது பேருந்தில் இருந்த மாணவிகள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

காயமடைந்த இரண்டு மாணவிகள் நாமக்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT