தமிழ்நாடு

சாதி, மதம் இல்லையென சான்றிதழ் வழங்க உத்தரவு

16th Aug 2022 04:55 PM

ADVERTISEMENT


சாதி, மதம் இல்லையென சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மனோஜ் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், காதல் திருமணம் செய்துகொண்டதால், மகனை பள்ளியில் சேர்ப்பதற்காக சாதி, மதம் இல்லையென சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் சான்றிதழ் பெறுவதற்கு தாமதமானதால், அவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையின்போது சாதி, மதம் இல்லையென சான்றிதழ் வழங்க அம்பத்தூர் வட்டாட்சியர் ஒப்புக்கொண்டதாக அரசு வழக்குரைஞர் குறிப்பிட்டார். 

விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 வாரங்களுக்குள் சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT