தமிழ்நாடு

'ஓபிஎஸ் ஒரு சுயேச்சை எம்எல்ஏ' - ஜெயக்குமார் பேட்டி

DIN

கட்சியை விட்டு நீக்கிய பிறகு ஓபிஎஸ் ஒரு சுயேச்சை எம்எல்ஏ என்றும் அதிமுகவின் மனுவை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு அண்ணா தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் திமுக அரசு நிறைவேற்றவில்லை? என்று கேள்வி எழுப்பினார். 

பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்த அவர், 'சட்டப்பேரவைத் தலைவர் தன்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். கட்சியை விட்டு நீக்கிய பிறகு ஓபிஎஸ்ஸை சுயேச்சை எம்எல்ஏவாகத் தான் பார்க்க வேண்டும். அதைத் தான் பேரவைத் தலைவர் செய்ய வேண்டும். அதிமுகவின் மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைவிட்டு அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுவது தேவையற்ற பேச்சு. அவர் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது. 

'பந்திக்கு முந்தி படைக்கு பிந்தி' என்பது போலத் தான் ஓபிஎஸ் தரப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் மாபெரும் சக்தி யார் என்பது அனைவருக்கும் தெரியும். 

அவர் பக்கம் 80% உறுப்பினர்கள் இல்லை. வெறும் 80 பேர் தான் இருக்கின்றனர். அவர் முடிந்தால் ஒரு ஆயிரம் பேரை திரட்டிக் காண்பிக்கப்பட்டும் பார்க்கலாம். அவரது நிலை என்ன என்பது தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும்.

சசிகலா, டிடிவி தினகரனை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT