தமிழ்நாடு

‘நான் ஸ்டாலின் பேசுறேன்’: மின்நுகர்வோரிடம் குறைதீர் சேவைப் பற்றி கேட்ட முதல்வர்

16th Aug 2022 02:53 PM

ADVERTISEMENT

மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நுகர்வோர்களிடம் குறைதீர் சேவைப் பற்றி தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார்.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மன்னார்குடியை சேர்ந்த 10 லட்சமாவது நுகர்வோரிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: 31.7 கிலோ தங்கமும் பறிமுதல்

இந்த நிகழ்வின்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT