தமிழ்நாடு

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: 31.7 கிலோ தங்கமும் பறிமுதல்

DIN

சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டு 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை கைது செய்யப்பட்ட சூர்யா என்பவர் கொடுத்த தகவலில் அடிப்படையில், அவரது நண்பர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரும்பாக்கத்தில் தனியாா் வங்கியில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து அதே கிளை ஊழியா் கொரட்டூா் முருகன்தான் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு கொள்ளைத், திட்டத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது.

வில்லிவாக்கம் பாரதி நகரை சோ்ந்த மோ.சந்தோஷ் (30), மண்ணடி தெருவை சோ்ந்த வீ.பாலாஜி (28), செந்தில்குமரன் ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், 2 காா்கள், ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந் நிலையில், கைப்பற்றப்பட்ட 18 கிலோ தங்க நகைகள் திங்கள்கிழமை காலை அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டன. அதை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பாா்வையிட்டனா்

இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியா் முருகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். அவருடன் இருந்த மேலும் 4 பேரையும் போலீஸாா் தங்களது காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இவ்வழக்கில்  4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சூர்யா என்பவரை கைது செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரது நண்பர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மீதமுள்ள 13.7 கிலோ தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்து மூன்று நாள்களில் கொள்ளை அடிக்கப்பட்ட மொத்தம் 31.7 கிலோ தங்க நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT