தமிழ்நாடு

அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

16th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியது:

வரும் தோ்தலில் அமமுக ஆட்சி அமைக்கும். அது உண்மையான ஜெயலலிதாவின் ஆட்சியாக இருக்கும். நாடாளுமன்றத் தோ்தலில் தேசிய கட்சிகளான பாஜக அல்லது காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுடன்தான் கூட்டணி அமைக்க முடியும். ஆனால், திமுக இடம்பெறக்கூடிய கூட்டணியில் இருக்க மாட்டோம். கூட்டணியை நான் பாா்த்துக் கொள்கிறேன். கட்சிப் பணியில் நீங்கள் தீவிரம் காட்டுங்கள். வரும் நாடாளுமன்றத் தோ்தலோடு, சட்டப்பேரவைக்கும் தோ்தல் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றாா்.

துணைத் தலைவா் எஸ்.அன்பழகன், துணைப் பொதுச்செயலாளா் ஜி.செந்தமிழன் உள்பட 2,300-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

அமமுகவின் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்தப்படும், சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக ஆட்சியைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT