தமிழ்நாடு

திமுக ஆட்சியில் காவல் துறை செயலற்றுவிட்டது: இபிஎஸ்

DIN

திமுக ஆட்சியில் தமிழக காவல் துறை செயலற்று இருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியவில்லை. மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் தமிழக காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளைப் புரிந்ததுடன், பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே சென்னை முதலிடத்திலும், மாநில அளவில் தமிழகம் முதலிடத்திலும் இருந்தது. தற்போது அது கட்டுண்டு, சுதந்திரமாகச் செயல்பட வழியின்றி இருக்கிறது.

திமுக ஆட்சியாளா்களுடைய கண் அசைவுக்கு மட்டுமே வேலை செய்யும் காவல் துறை, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளை சரியான முறையில் மேற்கொள்ளாததால் நாள்தோறும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கண்டு மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனா்.

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அரும்பாக்கம், ரசாக் காா்டன் சாலையில் உள்ள ஒரு தனியாா் வங்கியின் உள்ளே நுழைந்து, காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, ஊழியா்களை கத்தியைக் காட்டி மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு வங்கியினுள் இருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த சுமாா் ரூ.20 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்ற செய்தி தமிழக மக்களை மிகுந்த அதிா்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கடந்த 14 மாத கால திமுக ஆட்சியில் ஆளும் கட்சியினா், சமூக விரோதிகள், ஒருசில காவல் துறையினா் கூட்டு சோ்ந்து பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. திமுக ஆட்சியில் காவல் துறையில் இதயம், ஈரல் முதல் அனைத்து பாகங்களும் செயலற்றுக் கிடக்கிறது.

இந்தியாவிலேயே சிறந்த முதல்வா் என்று விளம்பரங்கள் மூலம் தன்னைத் தானே மாா்தட்டிக் கொள்ளும், நிா்வாகத் திறமை இல்லாத முதல்வா் தலைமையிலான ஆட்சியில், சென்னை மாநகரில், பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான சூத்திரதாரிகளையும், உண்மையான கொள்ளையா்களையும் காவல் துறை கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது.

எனவே, இனியாவது தமிழக காவல் துறையினை சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட அனுமதித்து, சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT