தமிழ்நாடு

தேமுதிக அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய விஜயகாந்த் 

15th Aug 2022 02:40 PM

ADVERTISEMENT

சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றினார். 

இதுகுறித்து தேமுதிக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். 

இதையும் படிக்க- மராத்தா இடஒதுக்கீடு ஆதரவாளா் வினாயக் மேட்டே சாலை விபத்தில் பலி

உடன் கட்சிப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தலைமை நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலார்கள், மகளிர் அணியினர், பகுதி, வட்ட கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், கட்சி தொண்டர்களுக்கும், பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர்.

ADVERTISEMENT

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT