தமிழ்நாடு

சென்னையில் காந்தி சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

15th Aug 2022 10:26 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். 

நாட்டின் சுதந்திர நாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். 

இதையடுத்து சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலையினை திறந்துவைத்தார். 

பின்னர் காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தி தமிழகம் வந்தபோது மேலாடையை துறந்த நிகழ்வினை நினைவுகூரும் பொருட்டு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையடுத்து விடுதலை போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட அருங்காட்சியகத்தை திறந்துவைத்து பார்வையிடுகிறார் முதல்வர் ஸ்டாலின். 

இதையும் படிக்க | தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்

ADVERTISEMENT
ADVERTISEMENT