தமிழ்நாடு

பாஜகவின் கே.பி.ராமலிங்கத்துக்கு ஆக. 29 வரை நீதிமன்ற காவல்

15th Aug 2022 08:10 PM

ADVERTISEMENT


பாரத மாதா நினைவாலய பூட்டை உடைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கத்திற்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பென்னாகரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், உடல் நலம் குணமடைந்தவுடன் சிறையில் அடைக்கப்படுவார் என நீதிபதி பிரவீணா தெரிவித்துள்ளார். 

தருமபுரி மவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா சிலைக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பாரத மாதா நினைவாலயம் திறக்கப்படவில்லை. நினைவாலயத்தைத் திறக்குமாறு பாஜகவினா் காப்பாளரிடம் கோரினா். ஆனால் சாதாரண நாள்களில் நினைவாலயத்தைத் திறப்பதில்லை எனக் கூறி பூட்டைத் திறக்க காப்பாளா் மறுத்துவிட்டாா்.

படிக்க ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ADVERTISEMENT

அதையடுத்து கே.பி.ராமலிங்கம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினா் பாரத மாதா நினைவிடக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தனா்.

பாப்பாரப்பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான பாரதமாத நினைவிட நுழைவு வாயிலின் பூட்டை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 11ஆம் தேதி தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரதமாத நினைவாலய பூட்டை உடைத்ததாக கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேர்மீது வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட கே.பி.ராமலிங்கம், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT