தமிழ்நாடு

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

15th Aug 2022 05:33 PM

ADVERTISEMENT

 

சுதந்திர நாளையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் முதல்வர் உள்பட, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், அரசு செயலர்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் பங்கேற்றுள்ளனர். 

சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு விருந்தினர்கள் பலருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து வழங்குகிறார். 

ADVERTISEMENT

இதில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.  அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உடன் தேநீர் விருந்தில் கலந்துகொண்டார். 

திரைப் பிரபலங்கள், பல்கலைக் கழக உயர் அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT