தமிழ்நாடு

11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடரும்: அன்பில் மகேஸ்

15th Aug 2022 01:04 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு முறை தொடரும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழகத்தில் தகவல்கள் வெளியான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிக்க | பரிசுத் தொகை ரூ.10 லட்சத்துடன் ரூ.5 ஆயிரம் சேர்த்து அரசுக்கே கொடுத்த நல்லக்கண்ணு

ஆண்டுதோறும் 11ஆம் வகுப்பில் பாடங்கள் சரியாக நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததாலேயே பொதுத் தேர்வு நடைமுறை கொண்டு வரப்பட்டது. எனவே, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது. மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT