தமிழ்நாடு

மதுரையில் கண்களை கவரும் வகையில் 'வின்டேஜ்' கார்களின் கண்காட்சி

15th Aug 2022 04:06 PM

ADVERTISEMENT

மதுரை அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள பாண்டியன் ஹோட்டலில் சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு பழங்கால கார் கண்காட்சியானது நடைபெற்றது.

இதில்,  1930 முதல் 1960 வரை அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன், ஜப்பான், இத்தாலி மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தயாரான ஆஸ்டின், டார்ஜ், மோரிஸ், பிளைமவுத், சிற்றோன், வோல்க்ஸ்வாகன், பென்ஸ், ஹிந்துஸ்தான், செவர்லெட், எலெகான்ட், ஜீப்,  உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கார்கள், பைக்குகள் அணிவகுத்து நின்றன.

இந்த கார் கண்காட்சியானது இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறுவதால் பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பங்களுடன் வந்து பழங்கால கார்களை பார்த்து புகைப்படங்களை எடுத்துச் சென்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT