தமிழ்நாடு

கொம்பன்குளம் அரசுப்பள்ளியில் தேசியக் கொடியேற்றிய 100 வயது மூதாட்டி!

15th Aug 2022 12:59 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம்: கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 வயது மூதாட்டி வடிவு தேசியக் கொடியேற்றினார்.

சுதந்திர நாள் விழாவை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அதன்படி, பாராமரியத்தை போற்றும் வகையில்
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக அதே ஊர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த நூறு வயதான மூதாட்டி வடிவு என்பவர் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றினார்.

ADVERTISEMENT

தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் வரவேற்றார். மூதாட்டி சேலை, கேக் கொடுத்து கெளரவிக்கப்பட்டார். அனைவருக்கும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது. மாணவிகள் அவிநா, பேச்சியம்மாள், உலகு, மகாலட்சுமி ஆகியோர் பேசினர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் சிறப்புரையாற்றிய மாணவர்கள், சத்துணவு அமைப்பாளருக்கு தொழிலதிபர் விக்னேஷ், அரிமா சங்க பொருளாளர் கனகராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். உதவி ஆசிரியை லெற்றியா நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT