தமிழ்நாடு

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

14th Aug 2022 05:14 PM

ADVERTISEMENT

 

மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார். 

படிக்கபாஜகவின் போலியான தேசபக்தி அம்பலம்: மு.க.ஸ்டாலின்

ADVERTISEMENT

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசி, தேசியக் கொடியை அவமதித்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என தமிழக அரசும், திமுகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. 

திமுக ஜனநாயக இயக்கம்; திமுக அறவழியில் தான் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT