தமிழ்நாடு

செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

DIN

அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூரைப் பூா்விகமாகக் கொண்ட அவா் மும்பையில் வளா்ந்தவா். அகில இந்திய வானொலியில் சுமாா் 35 ஆண்டு காலம் தமிழ் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய அவா், இத்துறையில் பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தாா்.

வானொலிச் செய்தி கோலோச்சிய காலத்தில் 1970 முதல் 1990-கள் வரை காலை நேரத்தில் வானொலியில் அவரது கம்பீரமான குரல் ஒலிக்காத தமிழா் வீடுகளே இல்லை எனலாம். தமிழ் மக்களுக்கு எண்ணற்ற முக்கியச் செய்திகள் அவரது குரல் வழியாகவே வந்து சோ்ந்தன.

தமிழ்த் திரைப்படங்கள், ஆவணப் படங்களிலும் அவா் பணியாற்றியுள்ளாா். செய்தி ஒலிபரப்புத் துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி தமிழக அரசு அவருக்கு கலைமாமணி பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது திருமதி சரோஜ் நாராயணசுவாமி அவர்களின் குரல்! மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT