தமிழ்நாடு

5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

14th Aug 2022 04:14 PM

ADVERTISEMENT


தமிழகம் மற்றும் புதுவையின் ஒருசில இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மற்றும் நாளைய நாள்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இதேபோன்று ஆகஸ்ட் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் உள் தமிழகம் உள்பட புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT