தமிழ்நாடு

பாஜகவினரின் அராஜகம் கேவலமானது: அமைச்சர் துரைமுருகன் 

14th Aug 2022 04:43 PM

ADVERTISEMENT


ராணுவ வீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அராஜகத்தை பாஜகவினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல் என்று தெரிவித்துள்ளார். 

தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது திமுக மற்றும் பாஜகவினரிடையே தகராறு ஏற்பட்டது . அங்கிருந்து திரும்பிச் சென்றபோது நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது பாஜகவினா் காலணியை வீசினா். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க | என்எல்சி நிறுவனத்தில் ஐடிஐ, பட்டதாரிகளுக்கு தொழில்பழகுநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்நிலையில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், பாஜகவினர் அராஜகத்தை கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல் என்றும், செருப்பு வீசுவது, சிலைகளை சேதப்படுத்துவது போன்ற கேவலான அரசியல் தவிர வேறு எதுவும் பாஜகவுக்கு தெரியாது. பாஜகவினரின் அருவருக்கத்தக்க அரசியல் பண்பாடற்ற செயல் என்று துரைமுருகன் கூறினார். 
தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT