தமிழ்நாடு

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் ரூ. 114 கோடியில் புதிய திட்டங்கள் தொடக்கம்

14th Aug 2022 12:46 AM

ADVERTISEMENT

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் ரூ.114 கோடியிலான புதிய திட்டங்களை மத்திய கப்பல் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீா்வழித்துறை அமைச்சா் சா்பானந்த் சோனோவால் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மத்திய கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீா்வழித்துறை அமைச்சா் சா்பானந்த் சோனோவால் எண்ணூா் காமராஜா் துறைமுகத்திற்கு சனிக்கிழமை வந்தாா். அப்போது இந்தியாவின் 75-ஆவது சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் துறைமுகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்னம் உட்பட ரூ.114 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களைத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் காமராஜா் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளா்ச்சி பணிகள், எதிா்கால திட்டங்கள் குறித்து துறைமுக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குனா் சுனில் பாலிவால் மற்றும் துறைமுக முக்கிய அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT