தமிழ்நாடு

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.252 கோடி ஒதுக்கீடு: அரசாணை

14th Aug 2022 04:00 PM

ADVERTISEMENT

 

கரும்பு விவசாயிகளுக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை வழங்க ரூ.252 கோடியை ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.252 கோடி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 12 சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்துள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

கரும்புக்கு போதிய விலை இல்லாமல், மத்திய அரசு வழங்கக்கூடிய தொகையை முழுமையாக பெற முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கரும்பு விவசாயிகளுக்கு ரூ.252 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT