தமிழ்நாடு

முதல் முறையாக பேருந்து சேவை பெற்ற மலைக் கிராமம்

14th Aug 2022 02:53 PM

ADVERTISEMENT

 

முதல் முறையாக அரசுப் பேருந்து சேவை பெற்ற வத்தமலை கிராம மக்கள் உற்சாக பயணம் மேற்கொண்டனர். 

தருமபுரி மாவட்டம், வத்தமலை கிராமத்துக்கு முதன்முறையாக அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. உற்சாக பயணம் மேற்கொண்ட கிராம மக்கள்  நெகிழ்ச்சியடைந்து உள்ளனர். 

மலைக் கிராமத்துக்குச் சென்ற பேருந்தில் அமைச்சர்கள் சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் பயணம் செய்தனர். 

ADVERTISEMENT

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோவை பதிவிட்டு கூறியதாவது: 

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தருவாயில், தருமபுரி மாவட்டத்தில் மினி ஊட்டி என்று அழைக்கப்படும் வத்தல்மலைக்கு முதல் முறையாக பேருந்து சேவையை  மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருடன் இணைந்து தொடங்கி வைத்து பயணித்தோம். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT