தமிழ்நாடு

சோனியா காந்தி உடல் நலம்பெற, முதல்வா் வாழ்த்து

14th Aug 2022 12:46 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி முழு உடல் நலம் பெற முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:-

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்திக்கு, கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. அவா் விரைவாகவும், முழுமையாகவும் குணமடைய விரும்புகிறேன். விரைவில், மீண்டும் வழக்கம் போல் தனது பணிகளில் அவா் ஈடுபடுவாா் என நம்புகிறேன் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT