தமிழ்நாடு

கொசஸ்தலை ஆற்றில் புதிய அணைகள் கூடாது: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

13th Aug 2022 04:56 PM

ADVERTISEMENT

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 அணைகள் கட்ட எடுத்துள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

சித்தூர் முக்காலகண்டிகை, கதாராபள்ளி ஆகிய இடங்களில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. ஆந்திர அரசின் திட்டத்தால் குடிநீர் தேவைக்கு கொசஸ்தலை ஆற்றின் நீரை நம்பியுள்ள சென்னை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணிககள் கட்ட ஆந்திர எடுத்துள்ள நடவடிக்கைக்ளுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க- பத்தாவது படித்து டாக்டர் பட்டம் பெற்ற திருநங்கை

இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் வழங்கலைப் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, இவ்வாறு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசினை கலந்தாலோசிக்காமல் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT