தமிழ்நாடு

திருவொற்றியூர் : ஆயிரம் பிறைக்கு மேல் கண்ட மீனாட்சி பாட்டி பிறந்தநாள்!

DIN

திருவொற்றியூரில் ஆயிரம் பிறைக்கு மேல் கண்ட மீனாட்சி பாட்டி பிறந்தநாள் கோலகால விழா நடத்தியுள்ளனர். 

திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில் அருகே வசித்து வந்தவர் சிவராம சாஸ்திரி இவர் மரணம் அடைந்து விட்டார் இவரது மனைவி மீனாட்சி என்ற பட்டம்மாள் பாட்டிக்கு இன்று அவருக்கு 100 வயது முடிந்து 101 வது வயது இந்த குடும்பத்தினர்  கோவில் பூஜை விவகாரங்களை பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர் சிவராம சாஸ்திரி மீனாட்சி பட்டம்மாள் தம்பதியினருக்கு 3 ஆண்களும் 2 பெண்களும் உள்ளனர் இந்த குடும்பத்தில் ஏழு பேரன்களும் ஐந்து பேத்திகளும் உள்ளனர் அந்த பேரன் பேத்தி மூலம் நான்கு கொள்ளு பேரன்களும் ஏழு கொள்ளு பேத்திகளும் உள்ளனர் இதில் கொள்ளுபேரன்  மூலம் ஒரு ஆண் குழந்தை உள்ளது அவர் எள்ளு பேரன் என்று அழைக்கப்படுகிறார் மீனாட்சி பாட்டி ஐந்து தலைமுறைகள் கண்டவர் ஆயிரம் பிறை கண்ட மீனாட்சி பாட்டிக்கு பிறந்த நாளை குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர் இதை அடுத்து சங்கரா காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் இதற்காக வேத விற்பனர்கள் சிறப்பு பூஜை செய்ய சாஸ்திரிகள் அவரை புனித நீராட்டி புத்தாடை அணிய வைத்து மேடையில் அமர வைத்தனர் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் நட்சத்திர கோமம் ஆயுசு கோமம் அவருக்காக 11 சாஸ்திரிகள் நடத்தினர் குடும்பத்தினர் சீர்வரிசை பணமாலை போட்டனர் 100 வயதை கடந்த மீனாட்சி பாட்டியிடம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல ஏராளமானோர்  ஆசீர்வாதம் வாங்கினர் மீனாட்சி பாட்டி தனது எள்ளு பேரனை தூக்கி கொஞ்சிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது100 வயதை கடந்த பிறகும் மீனாட்சி பாட்டி அவரது சொந்த வேலைகளை அவரே செய்து கொள்கிறார்  ஆசீர்வாதம் வழங்குவது திருநீறு பூசுவது சுளுக்கு எடுப்பது உட்பட பல வேலைகளை அவரே செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT