தமிழ்நாடு

சென்னையில் தனியார் வங்கியில் கொள்ளை: 4 தனிப்படைகள் அமைப்பு

13th Aug 2022 09:10 PM

ADVERTISEMENT

சென்னையில் தனியார் வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை, அரும்பாக்கம் ரசாகார்டன் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கத்தி முனையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது குறித்து, வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு அளித்த பேட்டியில், இதே வங்கியில் தற்போது வரை வேலை செய்து கொண்டிருந்த முருகன் என்ற ஊழியர் தான் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டறிந்துவிட்டோம்.

இதையும் படிக்க- சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட குரங்கு, பாம்புகள், ஆமைகள்

வங்கியில் வேலை செய்யும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது விரைவில் கண்டறியப்படும்.  விசாரணையில் இருப்பதால் இதற்கு மேல் எதுவும் தெரிவிக்க இயலாது. கொள்ளையில் ஈடுபட்டவரை கண்டுபிடித்துவிட்டதால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்பதும், குற்றவாளிகளை பிடிப்பதும் எளிமையானது தான். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

கூடுதலாக தனிப்படைகள் அமைக்கப்படுவது குறித்து ஆலோசனை ஈடுபட்டு வருகிறோம். கொள்ளை போன பொருட்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது என்றார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT