தமிழ்நாடு

10,500 உலமாக்களுக்கு சைக்கிள் அளிக்கும் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

13th Aug 2022 01:08 AM

ADVERTISEMENT

உலமாக்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சைக்கிள்களை அவா் வழங்கினாா்.

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் உலமாக்கள், பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.5.43 கோடி செலவில் 10 ஆயிரத்து 583 உலமாக்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் விதமாக, 3 பேருக்கு அவற்றை அளித்தாா். மேலும், 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் பயணம் மேற்கொண்ட 1,649 பயணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சாா்பில் ஹஜ் மானியத் தொகை வழங்கப்படுகிறது. நபருக்கு ரூ.27 ஆயிரத்து 628 வீதம், மொத்தம் ரூ.4.56 கோடி அளிக்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளா் முகமது நசிமுத்தின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT