தமிழ்நாடு

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு

13th Aug 2022 02:11 PM

ADVERTISEMENT

சென்னை:  தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக முதல்வரின் விருதுக்கு சேலம் மாநகராட்சி  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர்  முதலிடமும், குடியாத்தம் 2-வது இடமும். தென்காசி 3-வது இடமும் பிடித்துள்ளது. சேலம் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்தல், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வாழ்வியல் சூழலை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்து முதல்வர் விருது வழங்கப்படுகிறது.   

அதன்படி, நடப்பாண்டு சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இதன் ஆய்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டதில், தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கல்லணை கால்வாய் ஆற்றின் இடதுபுற கரையில் மண் அரிப்பு: நடைபாதை பாலம் இடிந்து விழுந்தது

நாளை மறுநாள்(ஆகஸ்ட் 15) நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்குகிறார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT