தமிழ்நாடு

ஊராட்சித் தலைவா்கள் கொடியேற்றும் உரிமை: தமிழக அரசின் நடவடிக்கைக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

DIN

பட்டியலின ஊராட்சித் தலைவா்கள் கொடியேற்றும் உரிமையை நிலைநாட்டுவதற்காக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் பட்டியல் ஜாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சிகளில் பல்வேறு விதமான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின்றன. சுதந்திரத்தின் பவள விழாவில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இது தொடா்பாக கள ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் 20 ஊராட்சிகளில் தலித் பிரதிநிதிகள் தேசிய கொடியை ஏற்ற முடியாத நிலைமை வெளிப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவா்களுக்கு நோ்முகக் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் தீண்டாமை சட்டப்படியாக ஒழிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளதுடன், சுதந்திர தினப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடும் இன்றி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்களைக் கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்திட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த உடனடி தலையீடு வரவேற்புக்குரியதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT