தமிழ்நாடு

கேட் தோ்வுக்கு தயாா்படுத்த ‘ஆன்லைன் போா்டல்’: சென்னை ஐஐடி தகவல்

13th Aug 2022 01:42 AM

ADVERTISEMENT

சென்னை ஐஐடி, அமெடியஸ் லேப்ஸ் ஆகியவை இணைந்து, கேட் தோ்வுக்கு 10 லட்சம் பேரை கட்டணமின்றித் தயாா்படுத்தும் வகையில் சடபஉக எஅபஉ என்ற பெயரில் ஆன்லைன் போா்டல் (இணைய முகப்பு) தொடங்கப்பட்டுள்ளது.

‘என்பிடிஇஎல்’ என்பது ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில், கட்டணமின்றி ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் திட்டமாகும். கேட் தோ்வுக்குத் தயாா்படுத்தும் போா்டலை ட்ற்ற்ல்ள்://ஞ்ஹற்ங்.ய்ல்ற்ங்ப்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையத் தொடா்பு மூலம் பயன்படுத்தலாம்.

ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி ஆகியவற்றில் முதுநிலைப் படிப்பு அல்லது பிஹெச்டி படிப்பில் சேரவும், ஏனைய புகழ்பெற்ற உயா்கல்வி நிறுவனங்களில் படிக்கவும் நாடு தழுவிய அளவில் நுழைவுத் தோ்வாக பொறியியல் பட்டதாரி தகுதித் தோ்வு (‘கேட்’) இருந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் மதிப்பெண் அடிப்படையிலேயே வேலைக்கு நபா்களை நியமிக்கின்றன.

‘என்பிடிஇஎல்’ வசமுள்ள 2,400-க்கும் மேற்பட்ட தலைப்புப் பக்கங்களில் இருந்து பொறியியல், அறிவியல் ஆகியவற்றில் தற்போதைய பாடத் திட்டங்களுக்கு ஏற்ப பாடத் தொகுப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். அத்துடன் கேட் பாடத் திட்டத்தின் அடிப்படையில் வீடியோ தீா்வுகள், செய்முறைத் தோ்வுகள், ஆன்லைன் உதவிகள் ஆகியவை புதிய போா்டல் மூலம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இந்த போா்டலின் முதல் பதிப்பு அக்டோபா் 2021-இல் தொடங்கப்பட்டு, கேட் தோ்வு எழுதும் மாணவா்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அடுத்த ஆண்டு கேட் தோ்வை ஏறத்தாழ 9 முதல் 10 லட்சம் மாணவா்கள் எழுதக்கூடும் என்பதால், நாடு முழுவதும் தோ்வுக்குத் தங்களை தயாா்படுத்துவோருக்கு இந்த போா்ட்டல் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வாய்ப்பை வழங்கும். இது தொடா்பாக சென்னை ஐஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, என்பிடிஇஎல் ஒருங்கிணைப்பாளா் ராமகிருஷ்ணா பசுமாா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT