தமிழ்நாடு

புதுச்சேரி ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடி: ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் விடியோ வைரல்

13th Aug 2022 12:54 PM

ADVERTISEMENT


 
புதுச்சேரி ஆழ் கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் ஏற்றியுள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் அரவிந்த். இவர் ஆழ்கடலில் வித்தியாசமான நிகழ்வுகளை செய்து வருகிறார். அந்த வகையில் நாட்டின் 75-ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு அவர் புதுச்சேரி கடலில் 75 அடி ஆழத்தில் அரியாங்குப்பம் அருகே ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க | மேட்டூரில் 600 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடி ஊர்வலம்: 1000 பேர் பங்கேற்பு

இவர் ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட், உலக யோகா நாள், காதலர் நாள், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்றவற்றிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்வுகளை கடலுக்கு அடியில் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT