தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி

13th Aug 2022 04:16 PM

ADVERTISEMENT

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடக்கூடிய வகையில், இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய 5 பேர் கைது

அதனையொட்டி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி மு. பழனிசாமி, தமிழகமெங்கும் கட்சி நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் 13.8.2022 முதல் 15.8.2022 வரை, அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ADVERTISEMENT

அதன்படி, தலைமைக் கழகம், ``புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை’’ வளாகத்தில் இன்று (13.8.2022 - சனிக் கிழமை), இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT