தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

13th Aug 2022 08:22 AM

ADVERTISEMENT


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கன அடியாக சரிந்தது. 

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை தணிந்து வருவதால் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 85,000 கன அடியாக சரிந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து சரிந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 1, 85,000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | தேசியக் கொடி-செய்ய வேண்டியதும் கூடாததும்!

ADVERTISEMENT

நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 62,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT