தமிழ்நாடு

இலங்கையிலிருந்து படகு மூலம் மேலும் 4 அகதிகள் ராமேசுவரம் வருகை

13th Aug 2022 09:49 AM

ADVERTISEMENT

 

இலங்கையிலிருந்து படகு மூலம் மேலும் 4 போ் அகதிகளாக ராமேசுவரத்துக்கு சனிக்கிழமை வந்தனா்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவில் தஞ்சமடைந்து வருகின்றனா். இதுபோன்று கடந்த சில மாதங்களில் 100க்கும் மேற்பட்டோர் இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி, ராமேசுவரம் வந்துள்ளனா்.

அவா்கள் அனைவருக்கும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜெயமாலினி, பதுர்ஜன், ஹம்சிகன், பதுஷிகா என 4 பேர் அகதிகளாக சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ராமேசுவரம் வந்துள்ளனர். 

இதுகுறித்து அவா்களிடம் மண்டபம் மரைன் காவல் நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிக்க | மாவட்டங்களின் வளா்ச்சிகளில் வேறுபாடுகள் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அவா்கள் படகு மூலம் ராமேசுவரம்  வந்ததும் தெரியவந்தது.

இவர்கள் 4 பேரும் 2006 முதல் 2019 வரை மண்டபம் முகாமில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

விசாரணையைத் தொடர்ந்து அவர்கள் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டலாம் என கூறப்படுகிறது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT