தமிழ்நாடு

கம்பம் தனியார் வாகன நிறுத்தத்தில் நள்ளிரவில் தீ விபத்து: 15 கார்கள் எரிந்து நாசம்

13th Aug 2022 10:49 AM

ADVERTISEMENT


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் வாகன நிறுத்தத்தில், சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 கார்கள் எரிந்து கருகியது, மேலும் 10 கார்கள் சேதமடைந்தது.

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தண்ணீர் தொட்டித் தெருவில், கோயில் வளாகத்தில் தனியார் வாகன நிறுத்தகம் உள்ளது,  இங்கு சுமார் 50 வாகனங்கள் வரை நிறுத்தப்படும்.

இங்கு அருகே உள்ள கேரளம் மாநில ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆண், பெண் கூலித் தொழிலாளர்களை ஜீப், டாடா சுமோ, பொலிரோ போன்ற வாகனங்கள் மூலம் காலையில் வேலை செய்யும் எஸ்டேட்டில் இறக்கி விட்டு, மாலையில் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இறக்கி விட்ட பின்னர் வாகனங்களை இங்கு நிறுத்துவது வழக்கம்.

இதையும் படிக்க | கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படவில்லை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

ADVERTISEMENT

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை வாகன நிறுத்தத்தில் கரும்புகை எழும்பியது. தீய்ந்த வாடையுடன் காற்றில் கலந்தது, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எழுந்து பார்த்த போது அதிர்ந்தனர். வாகன நிறுத்தத்தில் தீ மள மளவென எரிந்தது.

இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.

கம்பம் மற்றும் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இதில், 15 வாகனங்கள் தீயில் கருகி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது, அருகே நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்கள் சேதமடைந்திருந்தது.

இதையும் படிக்க | திருவெற்றியூர்: ஆயிரம் பிறைக்கு மேல் கண்ட மீனாட்சி பாட்டி பிறந்தநாள்!

கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்து மின்சார கசிவா அல்லது முன் விரோதம் காரணமாக யாராவது செய்திருப்பார்களா என்ற கோணத்தில் விசாரித்தும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT