தமிழ்நாடு

கல்லணை கால்வாய் ஆற்றின் இடதுபுற கரையில் மண் அரிப்பு: நடைபாதை பாலம் இடிந்து விழுந்தது

13th Aug 2022 01:43 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர்: கல்லணை கால்வாய் ஆற்றின் இடதுபுற கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை பாலம் இடிந்து ஆற்றில் விழுந்துள்ளது. 

தஞ்சை மாநகரின் மையப் பகுதியில் கல்லணை கால்வாய் ஓடுகிறது. இர்வின் பாலத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை கரையின் இருபுறமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பக்கவாட்டு தடுப்பு கம்பிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 

கல்லணை கால்வாய் ஆற்றில் வினாடிக்கு 3,221 கன அடி வீதம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், நீரின் வேகம் காரணமாக ஆற்றின் இடதுபுற கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை சரிந்து, பக்கவாட்டு தடுப்பு கம்பியுடன் ஆற்றில் விழுந்துள்ளது. இதை கவனிக்காத மக்கள் ஆபத்தான முறையில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  

ADVERTISEMENT

இதையும் படிக்க | மதுரை விமான நிலையத்தில் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு

முழுவதுமாக கரை உடைப்பு ஏற்பட்டு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்னர் பொதுப்பணித் துறையினர் மண் அரிப்பை சரி செய்து கரையை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT