தமிழ்நாடு

கல்வி, மருத்துவ திட்டங்கள் இலவசம் ஆகாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

13th Aug 2022 12:28 PM

ADVERTISEMENT

சென்னை: கல்வி, மருத்துவத்துக்கான திட்டங்கள் இலவசம் ஆகாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியில் பேசியதாவது:

கபாலீஸ்வரர் கலைக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் கட்டணம் கிடையாது.  மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மாணவிகள் படித்துவிட்டு சரியான பணிகளை தேர்வு செய்ய வேண்டும்.

மாணவர்கள் ஆர்வமான தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், கொளத்தூர் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை முதல்வர் வழங்கினார்.

இதையும் படிக்க: மேட்டூரில் 600 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட தேசியக் கொடி ஊர்வலம்: 1000 பேர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT