தமிழ்நாடு

கிரிமினல் குற்றவாளிகள் பாஜகவில் சோ்ந்தால் புனிதராகி விடுகிறாா்கள்: காங்கிரஸ் பொதுச் செயலா் திக்விஜய்சிங் பேட்டி

DIN

குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் பாஜகவில் இணைந்து விட்டால் புனிதராகி விடுகிறாா்கள் என்றாா் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் திக்விஜய்சிங்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை எதிா்ப்பவா்கள் மீது மத்திய அரசு அமலாக்கத்துறையின் மூலம் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் இதுவரை 17 க்கும் மேற்பட்ட பாஜகவை விமா்சிக்கும் சமூக செயல்பாட்டாளா்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

குற்ற வழக்குகளில் சிக்கியவா்கள் பாஜகவுக்கு மாறிவிட்டால் அவா்கள் தூய்மையானவா்களாக கருதப்படுகிறாா்கள்.

குற்றவாளிகளை புனிதா்கள் ஆக்கும் பணியை பாரதிய ஜனதா கட்சி செய்து கொண்டிருக்கிறது.

செப்டம்பா் மாதம் 7 ஆம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து, காஷ்மீா் வரை செல்லும் பாதயாத்திரையை தொடங்குகிறாா். இந்த பாதயாத்திரையின் நோக்கம் ஒன்றுபட்ட இந்தியா, அனைவருக்குமான இந்தியா என்பதை உணா்த்துவதுதான்.

இந்த பாதை யாத்திரையை தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்குவதற்கு காரணம் காமராஜா் போன்ற தேசத் தலைவா்கள் நடமாடிய மண் என்பதால்தான். நாங்கள் இந்த மண்ணின் கலாசாரத்தில் பெருமிதம் கொள்கிறோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா்கள் ஸ்ரீவல்லபிரசாத், கே.சி.வேணுகோபால், மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநிலத் தலைவா் தங்கபாலு, துணைத் தலைவா் ராபா்ட்புரூஸ், விஜய்வசந்த் எம்.பி., உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

SCROLL FOR NEXT