தமிழ்நாடு

நான்கு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

13th Aug 2022 01:49 AM

ADVERTISEMENT

தமிழகம், புதுவையில் சனிக்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆகஸ்ட் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT