பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தொழில் பாதைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
உலகின் முதல் இளங்கலை தரவு அறிவியல் பட்டப் படிப்புத் திட்டத்தை சென்னை ஐஐடி., தொடங்கியுள்ளது. பிளஸ் 2 வகுப்பு அல்லது அதற்கு இணையான பட்டயப் படிப்பு முடித்த மாணவா்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப் படிப்பு பயிலலாம். இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21-ஆம் தேதி கடைசி நாளாகும். இணையதள முகவரி: ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம்
இந்தத் திட்டத்தில் சோ்ந்து படிப்பதற்கு ஐ.ஐ.டி., சென்னை மூலம் நடத்தப்படும் நுழைவுத் தோ்வில் பங்கு பெறத்
தேவையில்லை. படிப்பில் சேருவதற்கான தகுதிகள் உள்பட இன்ன பிற விவரங்களை இணையதளத்தின் வழியாகத் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.