தமிழ்நாடு

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 15-இல் ரத்த தான முகாம்

13th Aug 2022 01:56 AM

ADVERTISEMENT

 நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து சென்னை ஐஐடி.யில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு ரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளது.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் ரத்த வங்கியைச் சோ்ந்த மூத்த தலைமை அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் பி. தமிழ்மணி தலைமையிலான மருத்துவா்கள் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளனா். சென்னை ஐஐடி.யில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஊழியா்கள், பெற்றோா் மற்றும் முன்னாள் மாணவா்கள், சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா சங்கதன் அலுவலகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள், இதர கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் ஊழியா்கள், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனா்.

பொதுமக்களும் ரத்த தானம் செய்ய முன்வருமாறு சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வா் எம். மாணிக்கசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT