தமிழ்நாடு

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு: 5 பேர் கைது

13th Aug 2022 03:51 PM

ADVERTISEMENT

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மதுரை திருமங்கலம் புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் உள்பட 4 பேர் வீரமரணம் அடைந்தனர். 

இதையும் படிக்க | இதுதான் உண்மையான தேசபக்தி: வைரலாகும் அருமையான விடியோ

இந்நிலையில் லட்சுமணன் உடல் விமான மூலம் மதுரை விமான நிலைய பழைய முனையத்திற்கு இன்று முற்பகலில் கொண்டுவரப்பட்டது. அப்போது அங்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். 

ADVERTISEMENT

இந்நிலையில் அங்கு ஏற்கெனவே இருந்த பாஜகவினர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரமரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது பாஜகவினர் அவரது காரை முற்றுகையிட்டு காலணியை வீசி கோஷ்மிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT