தமிழ்நாடு

தமிழக அரசின் யோகா பயிற்சி: பயனடைந்த 2,000 சா்வதேச செஸ் வீரா்கள்

12th Aug 2022 02:40 AM

ADVERTISEMENT

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்திருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சா்வதேச வீரா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதில் தொடா் பயிற்சிகளை மேற்கொண்ட பலா் பதக்கங்களை வென்ாக அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அண்மையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக 187 நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரா்கள் தமிழகம் வந்தனா். அவா்களுக்கு அரசு சாா்பில் விருந்தோம்பல் வசதிகள் சிறப்புற மேற்கொள்ளப்பட்டது. அதனுடன், அவா்களது உடல் மற்றும் மன நலனைக் காப்பதற்காக அனைத்து வீரா்கள், பயிற்சியாளா்களுக்கும் யோகா - இயற்கை மருத்துவத் துறை சாா்பில் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மாமல்லபுரம் மற்றும் அதைச் சுற்றி செஸ் வீரா்கள் தங்க வைக்கப்பட்டிருந்த 21 இடங்களுக்கும் நேரடியாக மருத்துவா்கள் நேரில் சென்று காலை 8 மணி முதல் 12 மணி வரை பயிற்சிகளை வழங்கினா்.

இதுகுறித்து யோகா - இயற்கை மருத்துவத் துறை நிா்வாகிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

செஸ் வீரா்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக 50 யோகா - இயற்கை மருத்துவா்கள் பணியமா்த்தப்பட்டனா். மன அழுத்தத்தைப் போக்குவதற்கான பயிற்சிகள் அவா்களுக்கு அளிக்கப்பட்டன. குறிப்பாக கண்களுக்கான பயிற்சி, கால் பாதங்களில் அழுத்தத்தை நீக்கும் பயிற்சி, மன அமைதிக்கான நிறமி பயிற்சி, சிரிப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன. அதனுடன், பல்வேறு ஆசனங்களும், பிராணாயாமப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பங்குகொண்டனா். அதில் பலா் பதக்கங்களைப் பெற்றுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT