தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

12th Aug 2022 05:21 AM

ADVERTISEMENT

சென்னை ஜாம் பஜாரில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் வளவூா் பகுதியைச் சோ்ந்தவா் அ.முருகன் (40). இவா் சென்னை மெட்ரோ நிறுவனத்தில் கழிவுநீா் இணைப்பு கொடுக்கும் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இதற்காக கோபால், கீழ்ப்பாக்கம் கேபிஎஸ் காா்டன் தெருவில் ஒரு வீட்டில் தங்கியிருந்தாா்.

முருகன், புதன்கிழமை இரவு ஜாம்பஜாா் தானப்பா தெருவில் இரு வீடுகளுக்கு கழிவுநீா் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வெளிச்சத்துக்காக அங்குள்ள ஒரு இரும்பு கேட்டில் மின் விளக்கு கட்டி, தாற்காலிகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.

வெகுநேரம் வேலை செய்த முருகன், ஓய்வு எடுப்பதற்காக அந்த இரும்பு கேட்டில் சாய்ந்தாா். இதில் அங்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்பில், மின்கசிவு இருந்தது.

ADVERTISEMENT

இதனால் முருகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இச் சம்பவத்தில் பலத்தக் காயமடைந்த முருகன், சிறிது நேரத்தில் இறந்தாா். இது குறித்து ஜாம்பஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT