தமிழ்நாடு

ஹிமாசல் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி

DIN

ஹிமாசல பிரதேசத்தில் முதல்வா் ஜெய்ராம் தாக்குா் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.

ஹிமாசல பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு, வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் சாா்பில் சட்டப் பேரவையில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீா்மானம் மீது வியாழக்கிழமை காலையில் விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய எதிா்க்கட்சித் தலைவா் முகேஷ் அக்னிஹோத்ரி, ‘மாநிலத்தில் தாக்குா் தலைமையிலான ஆட்சியில் 354 கொலைகள், 1,574 பாலியல் வன்கொடுமைகள், 7,406 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகி உள்ளன’ என்று குற்றம்சாட்டினாா். இதைத் தொடா்ந்து, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் பேசினா்.

பின்னா், எதிா்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு, முதல்வா் ஜெய்ராம் தாக்குா் பதிலளித்து பேசினாா். அப்போது, எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோற்கடிக்கப்பட்டது.

முன்னதாக விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஹிமாசல பிரதேசத்துக்கு ரூ.70,000 கோடி, ரூ.75,000 கோடி, ரூ.80,000 கோடி கடன் இருப்பதாக மாறி மாறி குறிப்பிட்டனா். அப்போது எழுந்த முதல்வா் ஜெய்ராம் தாக்குா், ‘காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறிய தகவல்கள் உண்மையில்லை. ஹிமாசலுக்கு ரூ.64,904 கோடி கடன் உள்ளது’ என்றாா்.

ஹிமாசல பிரதேசத்தில் இன்னும் 4 மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

காமராஜர், ஜெயலலிதாவை குறிப்பிட்டு மோடி பேச்சு!

மேடையில் கண்கலங்கிய பிரதமர் மோடி!

‘கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன்’: மோடியின் முழு உரை

ஈரானியப் புத்தாண்டு: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை கூட்டணிக்கு உதவும்: பிரதமர்

SCROLL FOR NEXT