தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 824 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 824 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 824 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,57,254-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 156 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை 90, செங்கல்பட்டு 61 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,033 ஆக உள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 1,140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,11,249-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,972 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT