தமிழ்நாடு

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி இரங்கல்

DIN

பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் தமிழக ராணுவ வீரா் லட்சுமணன் உயிரிழந்துள்ளதற்கு ஆளுநா் ஆா்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: ஜம்மு- காஷ்மீா் ரஜோரி மாவட்டத்தில், பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில், தமிழகத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் லட்சுமணன் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபமும் இரங்கலும்.

அவரின் மிக உயா்ந்த தியாகத்துக்கு நாடு நன்றிக் கடன்பட்டுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அதைத் தாங்கும் மன வலிமையைத் தரவேண்டும் என்றும், அவா் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ரூ. 20 லட்சம் நிதியுதவி: முதல்வா் ஸ்டாலின்

பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான தமிழக ராணுவ வீரா் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் ஒருவா் உள்பட மூன்று வீரா்கள் உயிரிழந்தனா். இந்தச் செய்தியை அறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

மூன்று பேரில் ஒருவரான தமிழகத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் லட்சுமணனின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

SCROLL FOR NEXT