தமிழ்நாடு

கரும்புகை: கோவையில் கோ ஏர் விமானம் அவசர தரையிறக்கம்

DIN

கோவை விமான நிலையத்தில் கோ ஏர் விமானம் அவசரமாக இன்று தரையிறக்கப்பட்டது. 

கோவை விமான நிலைத்திற்கு தினந்தோறும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை கோ ஏர்-43 என்ற விமானம் ஒன்று பெங்களூருவில் இருந்து 92 பயணிகளுடன் மாலி நாடு நோக்கி சென்று கொண்டிருந்தது. 

அப்போது அந்த விமானத்தில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். விமானம் கோவை சுற்றுவட்டாரப்பகுதிக்குள் பறந்து கொண்டிருந்ததால் உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் மதியம் 12.57 மணியளவில் அவசரமாக தரையிரக்கப்பட்டது.இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

நாடு மாற்றத்தை விரும்புகிறது: கார்கே

2வது நாளில் சரிந்த பங்குச்சந்தை வணிகம்!

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

‘வெண்புறா’ க்ரித்தி சனோன்!

SCROLL FOR NEXT