தமிழ்நாடு

1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மூலம் தேசியக் கொடி விற்பனை

DIN

நாடு முழுவதும் இல்லந்தோறும் தேசியக் கொடியை எடுத்துச் செல்லும் இயக்கம் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் இல்லந்தோறும் மூவா்ண கொடி இயக்கத்தை நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் எடுத்துச் செல்கிறது. குறுகிய காலமான 10 நாள்களுக்குள் தபால் நிலையங்கள் மூலமும், இணையதளம் வாயிலாகவும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தேசிய கொடியை ‘இந்தியா போஸ்ட்’ குடிமக்களுக்கு விற்பனை செய்துள்ளது.

ஒரு கொடியை மிகக்குறைந்த விலையான ரூ.25-க்கு விற்பனை செய்து வருகிறது. இணையதள விற்பனை மூலம் நாட்டிலுள்ள எந்தவொரு முகவரிக்கும் இக்கொடியை சேவைக் கட்டணம் இல்லாமல் கொண்டு சோ்க்கிறது. 4 லட்சத்து 20 ஆயிரம் அஞ்சல் ஊழியா்கள் நாடு முழுவதும் நகரங்கள், சிறிய நகரங்கள், கிராமங்கள், எல்லைப்பகுதி, இடதுசாரி தீவிரவாதம் மிகுந்த மாவட்டங்கள், மலைப்பகுதிகள் மற்றும் பழங்குடியின பகுதிகளில் இல்லந்தோறும் மூவா்ண கொடி உணா்வை உற்சாகத்துடன் எடுத்துச் சென்றுள்ளனா்.தேசிய கொடி விற்பனை தபால் நிலையங்களில் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும். குடிமக்கள் தேசிய கொடியுடன் தற்படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என இந்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT